திருமண துஆ

நமது ஊரில் வழக்கமாக

திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர்.

 

அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா….. என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின் காலத்திலோ நடைமுறையில் இருந்ததில்லை.

 

தமிழகத்தைச் சேர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது.

ஆதம்-ஹவ்வா போல் வாழ்க!

அய்யூப்-ரஹிமா போல் வாழ்க!

என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் போல் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அமைந்துள்ளது.

 

அந்த நபிமார்களும் அவர்களின் மனைவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரமோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரமோ நமக்குத் தெரியாது.

 

அவர்களின் இல்லறம் எப்படி இருந்தது என்பது தெரியாமல் அது போன்ற வாழ்க்கையைக் கேட்பது அர்த்தமற்றதாகும்.

 

” உனக்கு அறிவில்லாத விஷயங்களை நீ பின்பற்ற வேண்டாம் “

– அல்குர்ஆன் 7:38

 

எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.

 

மணமக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச்

செய்துள்ளனர்.

 

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது,

 ‘பாரகல்லாஹு லக’ (அல்லாஹ் உனக்கு பரகத் – புலனுக்கு எட்டாத பேரருள் – செய்வானாக) எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 5155, 6386

 

இதை ஆதாரமாகக் கொண்டு பாரகல்லாஹு லக’ என்று கூறி வாழ்த்தலாம்.

 

‘பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும்’ என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது.

நூல்: அஹ்மத் 15181

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது,

‘பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599

 

‘அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக’ என்பது இதன் பொருள்.

 

ஒவ்வொருவரும் இந்த துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.

Advertisements

வழிமுறைகளை பின்பற்றுதல் – Imitates

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

”உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்.

எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள்,
”அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலலித்தார்கள்.

– புகாரி (3456)

 

Ibn ‘Umar said: “The Messenger of Allaah (pbuh) said: ‘Whoever imitates a people is one of them.’”

(Narrated by Abu Dawood, al-Libaas, 3512, Al-Albaani said in Saheeh Abi Dawood, (it is) hasan saheeh. No. 3401)

பலஹீனமான ஹதீஸ்: ரமழான் நோன்பு பற்றிய செய்தி – 10

  حدثنا عبد الله ثنا عبيد الله بن عمر عن زائدة بن أبي الرقاد عن زياد النميري عن أنس بن مالك قال : كان النبي صلى الله عليه و سلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبارك لنا في رمضان
مسند أحمد بن حنبل –  2346 

‘யா அல்லாஹ் ரஜபிலும் ஷஃபானிலும் ரமழானிலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக இன்னும் சில அறிவிப்புக்களில் எங்களை ரமழானை அடையச்செய்வாயாக).
(அஹ்மத் – 2346)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸாஇதா இப்னு அபீர்ருக்காத் இடம்பெறுகிறார் அவர் ஹதீஸ்கலையில் நிராகரிக்கப்பட்டவர்.

பலஹீனமான ஹதீஸ்: ரமழான் நோன்பு பற்றிய செய்தி – 9

حدثنا هشام بن عمار . حدثنا الوليد بن مسلم . حدثنا إسحاق بن عبيد الله المدني قال سمعت عبد الله بن أبي مليكة يقول سمعت عبد الله بن عمرو بن العاص يقول
 ( إن للصائم عنده فطره دعوة لا ترد ) أخرجه أحمد 2/305 ، والترمذي 3668 ، وابن خزيمة 1901 ، وابن جاه 1752 وفي سنده إسحاق بن عبيدالله المدني لا يعرف كما قال المنذري ، وقد ضعَّف الحديث ابن القيم في زاد المعاد . والحديث ضعفه الترمذي . وله شاهد عند البيهقي 3/345 وفي سنده أبو مدلة . قال عنه ابن المديني : مجهول . وقال الذهبي : لا يكاد يعرف . فالحديث ضعيف .

”நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் துஆ அங்கீகரிக்கப் படும். ”
(திர்மிதி3668,) (அஹ்மத், 2305)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையிலே இடம்பெறும் இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் அல் முதனீ என்பவரும், வேறு சில அறிவிப்புக்களில் அபூ முத்லா என்பாரும் இடம் பெறுகிறார்கள்.இவ்விருவரும் யாரென்றே அறியப்படாதவர்கள் ஆவர்.

 

பொதுவாக துஆ அங்கீகரிக்கப் படும் நேரங்களில், நோன்பாளியின் துஆவும் அடங்கும் என்று ஹதீஸகளில் இருப்பதால் நோன்பிருந்ததி (ஸஹரி)லிருந்து இப்தார் வரைக்கும் துஆ ஏற்றுக் கொள்ளப் படும் நேரம் என்பது குறிப்பிடத் தக்கது.

ثلاث دعوات مستجابات : دعوة الصائم ، و دعوة المظلوم ، و دعوة المسافر
الراوي: أبو هريرة – خلاصة الدرجة: صحيح – المحدث: الألباني – المصدر: صحيح الجامع – الصفحة أو الرقم: 3030

மூன்று பேரின் துஆ ஏற்கப்படத்தக்கவை.,

1. நோன்பாளியின் துஆ
2. அநீதம  செய்யப்பட்டவனின் துஆ.
3. பயணியின் துஆ.
(அல்பானி ஸஹீஹுல் ஜாமிஃ 3030)

எனவே, நோன்பு திறக்கும் நேரம் என்று குறிப்பிட்டு வருகின்ற வார்த்தைதான் பலஹீனமானதே தவிர நோன்பாளியின் துஆ, துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களில் ஒன்றுதான் என்பதை சரியாக விளங்கிக் கொள்வோமாக.

பலஹீனமான ஹதீஸ்: ரமழான் நோன்பு பற்றிய செய்தி – 8

أخبرنا أبو عبد الله الحافظ ، حدثنا أبو عبد الله الصفار ، إملاء ، حدثنا أحمد بن مهران بن خالد الأصبهاني ، حدثنا الفضل بن جبير ، حدثنا سليمان بن عمرو ، ح ، وأخبرنا علي بن أحمد بن عبدان ، أخبرنا أحمد بن عبيد الصفار ، حدثنا أحمد بن الهيثم الشعراني ، حدثنا سريج بن يونس ، حدثنا سليمان بن عمرو ، عن عبد الملك بن عمير ، عن عبد الله بن أبي أوفى ، عن النبي صلى الله عليه وسلم ، قال : « نوم الصائم عبادة ، وسكوته تسبيح ، ودعاؤه مستجاب ، وعمله متقبل » . لفظ حديث ابن عبدان ، وفي رواية أبي عبد الله ، قال : قال رسول الله صلى الله عليه وسلم ، وقال : « وعمله مضاعف ، ودعاؤه مستجاب حتى يمسي أو حتى يصبح »
شعب الإيمان للبيهقي – 3779

‘நோன்பாளியின் தூக்கம் வணக்கமாகும் அவரது மௌனம் தஸ்பீஹ் செய்வதாகும். அவரது பிரார்த்தனை காலை அல்லது மாலையை அடையுமுன் ஏற்றுக் கொள்ளப் பட்டதாகும்.’ என்று நபிகளார் கூறினார்கள்.
(பைஹக்கீ, ஷுஅபுல் ஈமான் – 3779)

இவ்வறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஸுலைமான் இப்னு அம்ர் என்பவர் ஹதீஸ்களை புனைந்து சொல்பவர் என்பதால் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

பலஹீனமான ஹதீஸ்: ரமழான் நோன்பு பற்றிய செய்தி – 7

 حدثنا مسدد ثنا هشيم عن حصين عن معاذ بن زهرة أنه بلغه: أن النبي صلى الله عليه و سلم كان إذا أفطر قال ” اللهم لك صمت وعلى رزقك أفطرت ”
 سنن أبي داود -2358

நபியவர்கள் நோன்பு திறக்கும் போது ‘அல்லாஹ{ம்ம லகஸ{ம்து வஅலாரிஸ்கிக அப்தர்து’ என்று ஓதுவார்கள்.
(அபூதாவூத் – 2358)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையிலே இடம்பெறும் முஆத் இப்னு ஸஹ்ரா யாரென்றே அறியப்படாதவர்.

 

 حدثنا عبد الله بن محمد بن يحيى أبو محمد ثنا علي بن الحسن أنا الحسين بن واقد ثنا مروان يعني ابن سالم المقفع قال  :” …….. وقال كان النبي صلى الله عليه و سلم إذا أفطر قال ” ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله “
سنن أبي داود – 2357

நபியவர்கள் நோன்பு திறக்கும் போது ‘தஹப்பல்லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’ என்று கூறுவார்கள்.
(அபூதாவூத் – 2357)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையிலே மர்வான் இப்னு ஸாலிம் யாரென்றே அறியப்படாதவர்.

 

எனவே நோன்பு திறப்பதெற்கென்று எந்தவொறு துஆவும் கிடையாது. சாதரணமாக உண்ணும் போது கூறும் “பிஸ்மில்லாஹ்” வை உண்ண ஆரம்பிக்கும் போது கூறுவதுதான் நபி வழி. 

كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم ، وكانت يدي تطيش في الصحفة ، فقال لي رسول الله صلى الله عليه وسلم : ( يا غلام ، سم الله ، وكل بيمينك ، وكل مما يليك ) . فما زالت تلك طعمتي بعد .

(நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்,

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருப்பதை எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
(புஹாரி-5376)

பலஹீனமான ஹதீஸ்: ரமழான் நோன்பு பற்றிய செய்தி – 6

 حدثنا محمد بن يحيى بن أبي سمينة حدثنا عبد الله بن رجاء حدثنا جرير بن أيوب عن الشعبي عن نافع بن بردة عن ابن مسعود : أنه سمع النبي صلى الله عليه و سلم وهو يقول – وقد أهل رمضان – : لو علم العباد ما في رمضان لتمنت أمتي أن يكون رمضان السنة كلها ……”
مسند أبي يعلى –  5273

‘ரமழானில் உள்ள சிறப்புக்கள் என்ன என்பதை அடியார்கள் அறிந்தால் வருடம் முழுவதும் ரமழானாக இருக்கவேண்டுமே என ஆசைப்படுவார்கள்…’
(அபூ யஃலா – 5273)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஜரீர் இப்னு அய்யூப் ஹதீஸ்களை புனைந்துரைப்பவர். எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.