திருமண துஆ

நமது ஊரில் வழக்கமாக

திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர்.

 

அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா….. என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின் காலத்திலோ நடைமுறையில் இருந்ததில்லை.

 

தமிழகத்தைச் சேர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது.

ஆதம்-ஹவ்வா போல் வாழ்க!

அய்யூப்-ரஹிமா போல் வாழ்க!

என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் போல் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அமைந்துள்ளது.

 

அந்த நபிமார்களும் அவர்களின் மனைவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரமோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரமோ நமக்குத் தெரியாது.

 

அவர்களின் இல்லறம் எப்படி இருந்தது என்பது தெரியாமல் அது போன்ற வாழ்க்கையைக் கேட்பது அர்த்தமற்றதாகும்.

 

” உனக்கு அறிவில்லாத விஷயங்களை நீ பின்பற்ற வேண்டாம் “

– அல்குர்ஆன் 7:38

 

எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.

 

மணமக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச்

செய்துள்ளனர்.

 

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது,

 ‘பாரகல்லாஹு லக’ (அல்லாஹ் உனக்கு பரகத் – புலனுக்கு எட்டாத பேரருள் – செய்வானாக) எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 5155, 6386

 

இதை ஆதாரமாகக் கொண்டு பாரகல்லாஹு லக’ என்று கூறி வாழ்த்தலாம்.

 

‘பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும்’ என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது.

நூல்: அஹ்மத் 15181

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது,

‘பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599

 

‘அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக’ என்பது இதன் பொருள்.

 

ஒவ்வொருவரும் இந்த துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.

வழிமுறைகளை பின்பற்றுதல் – Imitates

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

”உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்.

எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள்,
”அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலலித்தார்கள்.

– புகாரி (3456)

 

Ibn ‘Umar said: “The Messenger of Allaah (pbuh) said: ‘Whoever imitates a people is one of them.’”

(Narrated by Abu Dawood, al-Libaas, 3512, Al-Albaani said in Saheeh Abi Dawood, (it is) hasan saheeh. No. 3401)

பலஹீனமான ஹதீஸ்: ரமழான் நோன்பு பற்றிய செய்தி – 10

  حدثنا عبد الله ثنا عبيد الله بن عمر عن زائدة بن أبي الرقاد عن زياد النميري عن أنس بن مالك قال : كان النبي صلى الله عليه و سلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبارك لنا في رمضان
مسند أحمد بن حنبل –  2346 

‘யா அல்லாஹ் ரஜபிலும் ஷஃபானிலும் ரமழானிலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக இன்னும் சில அறிவிப்புக்களில் எங்களை ரமழானை அடையச்செய்வாயாக).
(அஹ்மத் – 2346)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸாஇதா இப்னு அபீர்ருக்காத் இடம்பெறுகிறார் அவர் ஹதீஸ்கலையில் நிராகரிக்கப்பட்டவர்.